மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

சாதி வேறுபாடற்ற மயானங்கள் திட்டத்திற்கு ரூ.10 லட்சம்!

சாதி வேறுபாடற்ற மயானங்கள் திட்டத்திற்கு ரூ.10 லட்சம்!

சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமங்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இன்று(செப்டம்பர் 8) சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, விதி எண் 110 கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குகிறது. சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம் என்று கூறிய முதல்வர், “மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களின் பிரச்சினைகளை தீர்க்க தன்னாட்சி அதிகாரத்துடன் நல ஆணையம் அமைக்கப்படும். ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்க இந்த கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும். இப்பரிசுத் தொகை, சாதி வேறுபாடற்ற மயானங்கள் திட்டம் கொண்ட கிராமத்திற்கு வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை வழங்கும். ஆனால் நிர்வாகத்தில் பள்ளிக் கல்வித் துறை தலையிடாது. அந்த பள்ளிகள் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும். அந்த பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் ரூபாயும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும் மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கப்படும்.

விழிப்புணர்வுக் கூட்டமே தேவையில்லை என்கிற நிலையை அடைவதே நம் இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் மனதில் மடைமாற்றத்தை ஏற்படுத்தி, நாம் அனைவரும் திருவள்ளுவர் கூறியதற்கேற்ப ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற ஒப்பற்ற தத்துவத்தின்படி இணைந்து வாழ அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி அமர்ந்தார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 8 செப் 2021