மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 8 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் சொன்ன தகவல்!

உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் சொன்ன தகவல்!

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூரில் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று மாதங்களில் எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கட்சிக்காரர்களை வாழ வைக்கக் கூடிய தேர்தல். எனவே, சட்டமன்றத் தேர்தல் போல் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும். ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்டக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடுபவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு” என்று பேசினார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 8 செப் 2021