மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

நீட் தேர்வை ஒத்திவை: ராகுல்

நீட் தேர்வை ஒத்திவை: ராகுல்

நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 7) வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது என்று நேற்று (செப்டம்பர் 6) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் ராகுல் காந்தி இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

தமிழகம் நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டுமென்று போராடி வரும் நிலையில், இந்திய அளவில் மாணவர்கள் தற்போதைய கொரோனா காலகட்டத்தில் நீட் தேர்வை தள்ளியாவது வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுதும் சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாநில பாடத் திட்டங்களில் பல மாநிலங்கள் தேர்வை நடத்தினார்கள். இந்நிலையில் செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு என்று நீட் தேர்வு முகமை அறிவிப்பு செய்தது.

கொரோனா தொற்று காரணமாகவும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 15 வரை நடைபெறுவதால் நீட் தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று மாணவர்கள் கோரினார்கள். ஆனால் ஒன்றிய அரசு நீட் தேர்வு ஹால் டிக்கெட் வழங்கத் தொடங்கிய நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்குமாறு சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பதிவில், “மாணவர்களின் மன அழுத்தத்தை பாராமுகமாக இருக்கிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வை ஒத்தி வையுங்கள். மாணவர்களுக்கு நியாயமான வாய்ப்பை உருவாக்கித் தாருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

செவ்வாய் 7 செப் 2021