மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

பள்ளிகளில் கொரோனா: அமைச்சர் சொல்வது என்ன?

பள்ளிகளில் கொரோனா: அமைச்சர் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் எந்தெந்த பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறதோ, அந்த பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் பாதிப்பு என்பது பெரியளவில் இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, தமிழ்நாட்டில் 9முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று(செப்டம்பர் 7) காலை சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்தி, ஒரே நாளிலே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்கக் கோரி நானும், தலைமைச் செயலாளரும் தனித்தனியாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம். அதன்மூலம் வருகிற 12ஆம் தேதி திட்டமிட்டப்படி ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்ற நிலை உருவாக்கப்படும். கேரள எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களில் தடுப்பூசி போட முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறினார்.

மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவது குறித்து பேசிய அவர், “ எந்தெந்த பள்ளிகளில் கொரோனா தொற்று கண்டறியப்படுகிறதோ அந்த பள்ளிகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் உடனடியாக செய்யப்பட்டு வருகிறது.

பாதிப்பு என்பது பெரியளவில் இல்லை என்பதே உண்மை. பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

மாநிலத்தில் மொத்தமாக 3,59,31,677 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 44 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 15 சதவிகிதம் பேர் இரண்டம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்” என்று கூறினார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 7 செப் 2021