மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 7 செப் 2021

பதிவுத் துறை முறைகேடு: சிறப்புப் புலனாய்வு விசாரணை!

பதிவுத் துறை முறைகேடு: சிறப்புப் புலனாய்வு  விசாரணை!

பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மூர்த்தி நேற்று (செப்டம்பர் 6) தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் மூர்த்தி பேசினார்.

வணிகவரித் துறையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிய நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்கப்படும்.

வணிகவரித் துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போலி பட்டியல் தயாரிக்கும் நபர்களின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

வரி ஏய்ப்பு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைக் காவல் துறையின் பொருளாதாரக் குற்ற தடுப்பு பிரிவின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

வணிகவரித் துறையில் மாநிலக் கட்டுப்பாட்டு அறை 3.86 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.

தாமதமாக வரி செலுத்துவோரைத் தொடர்ந்து வலியுறுத்த புதிய அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களின் தலைமை இடங்களில் ஐந்து புதிய பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

கடந்த காலங்களில் பதிவுத் துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும்.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டிவனம் ஆகிய மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்கும், 26 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் பதிவுத் துறைக்குச் சொந்தமான இடங்களில் 41.36 கோடி ரூபாய் செலவில் புதிய அரசு கட்டடங்கள் கட்டப்படும்.

தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள், நிர்வாக மாவட்டப் பதிவாளர்கள், உதவி பதிவுத் துறைத் தலைவர்களுக்குப் புதிதாக 50 வாகனங்கள் வழங்கப்படும்.

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக அந்த அலுவலகங்களில் உள்ள பதிவறையில் இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகள் 5.98 கோடி ரூபாய் செலவில் வைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 7 செப் 2021