மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

செப் 8: இருவேளையும் சட்டப்பேரவைக் கூட்டம்!

செப் 8: இருவேளையும் சட்டப்பேரவைக்  கூட்டம்!

வரும் செப்டம்பர் 8ஆம் தேதி இரு வேளையும் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு இன்று (செப்டம்பர் 6) அறிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின் அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில், வரும் 8 ஆம் தேதி காலை, பிற்பகல் இரு வேளையும் கூட்டத்தொடர் நடைபெறும். அன்று காலை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்பகலில், இயக்கூா்திகள் குறித்த சட்டங்கள் - நிா்வாகம், போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மீதான விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 9ஆம் தேதி காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான விவாதம் நடைபெறும்.

செப்டம்பர் 10, 11, 12ஆகிய மூன்று நாட்கள் விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு கிழமை காரணமாக அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. திட்டமிட்டபடி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் . பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 13ஆம் தேதி கேள்வி நேரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

திங்கள் 6 செப் 2021