மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

தொழிலாளர்களுக்கு இருக்கை கட்டாயம்!

தொழிலாளர்களுக்கு இருக்கை கட்டாயம்!

கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அமர்வதற்கு இருக்கை கட்டாயம் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் சட்டமுன் வடிவு தாக்கல் செய்யப்பட்டது.

துணி, நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உட்காருவதற்கு அனுமதி கிடையாது. வாடிக்கையாளர் இல்லையென்றாலும், வேலை முடியும் வரை ஊழியர்கள் நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். சில கடைகளில் வேலை நேரங்களில் கழிவறைக்குச் செல்வதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை.

இந்நிலையில் இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து பணியாற்ற வழி வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 6) தாக்கல் செய்யப்பட்டது.

1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் சி.வி. கணேசன் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்களை வேலை நேரம் முழுக்க நிற்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் பணியாளர்களுக்கு உடல் நலக் குறைவும் ஏற்படுகிறது.

எனவே கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் இருக்கை கட்டாயம் என்று தமிழக அரசு கருதுகிறது. கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற மாநில தொழிலாளர் குழு கூட்டத்தில், ஊழியர்களுக்கு இருக்கை வசதி வழங்குவது குறித்து ஆலோசனை முன் வைக்கப்பட்டது.

எனவே, 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றம் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்பு தொழிலாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில்

"தமிழக அரசுக்கு நன்றி. என் 'அங்காடித் தெரு' திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. 'அங்காடித் தெரு' திரைப்படத்தில் தொடர்ந்து நின்றுகொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 6 செப் 2021