மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

பூஸ்டர் டோஸ்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்!

பூஸ்டர் டோஸ்: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்!

பூஸ்டர் டோஸ் போடுவது தொடர்பாக இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் பூர்வாங்க பணிகள் தொடங்கவில்லை என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “கொரோனா வைரசுக்கான 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்குப் பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் என்பதால் தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன், "ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவிகிதம் பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகவில்லை. இறப்பு சதவிகிதமும் முற்றிலுமாக தடுக்கப்பட்டிருக்கிறது.

பூஸ்டர் டோஸ் தொடர்பாக அதனைச் செயல்படுத்த ஒன்றிய அரசு சார்பில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இதுவரை பூஸ்டர் டோஸ் போடுவது தொடர்பாக எந்த செயல்முறைகளையும் வழங்கவில்லை. எனவே தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்படவில்லை” என்று விளக்கமளித்தார்.

-பிரியா

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

திங்கள் 6 செப் 2021