மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 செப் 2021

மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பேன்: எம்.எம். அப்துல்லா

மீனவர்களுக்காகக் குரல் கொடுப்பேன்: எம்.எம். அப்துல்லா

திமுக சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு நேற்று (செப்டம்பர் 5) வருகை தந்தார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தல் அறிக்கையில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகத் தனி அமைச்சகத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தோம். வெளிநாடு வாழ் தமிழர்கள் விவகாரத்தில் எது செய்வதாக இருந்தாலும், ஒன்றிய அரசை கேட்டுதான் செய்ய வேண்டியுள்ளது. எனவே வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒன்றிய அரசின் மூலமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிபவர்கள் கொரோனா காலத்தில் விசா முடிந்து வேலை இல்லாமல் அங்கேயே உள்ளனர். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்தவர்கள் மீண்டும் வெளிநாடு செல்ல முடியாமல் உள்ளனர். இதற்குத் தீர்வு காணப்படும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு மாநிலங்களவையில் அழுத்தமாகக் குரல் கொடுப்பேன். மாநிலங்களவையில் கட்சி என்ன கொள்கை சார்ந்த முடிவு எடுக்கிறதோ அதற்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

திமுகவில் உழைத்தவர்களுக்குப் பலன் கிடைக்கும் என்பதற்கு தானே உதாரணம்” என்று தெரிவித்தார்.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

திங்கள் 6 செப் 2021