மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

பொங்கலுக்கு பிரமாண்ட கலை விழா: அமைச்சர் தங்கம் தென்னரசு

பொங்கலுக்கு பிரமாண்ட கலை விழா: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று ஆண்டுதோறும் சென்னையில் இணையம் வாயிலாக பிரமாண்ட கலை விழா நடத்தப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நேற்று (செப்டம்பர் 4) சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மற்றும் சுற்றுலா மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், சுற்றுலா மற்றும் தொழிலாளர் நலத்துறை தொடர்பான திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

சுற்றுலா தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் தொல்லியல் நிறுவனம், தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறுசீரமைக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம், அரிட்டாபட்டி, சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொண்டூர், நேகனூர்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஐந்து தமிழ் கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.

கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய அகழாய்வு பகுதிகளுடன் சேர்த்து புதியதாக வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை உள்ளிட்ட இடங்களிலும் அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 90க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் ஆவணப்படுத்தப்படும். இதற்காக, 2001 - 2022ஆம் ஆண்டு ரூ.20 லட்சமும், 2022 - 2023ஆம் ஆண்டு ரூ.40 லட்சமும் என இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தொல்பொருளியல் தொகுப்பு கண்காட்சிகளை விரிவுப்படுத்தும் விதமாக புதிய கட்டடம் கட்டி அரும்பொருட்களைப் பன்னாட்டு தரத்தில் காட்சிப்படுத்தப்படும். சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

அரியலூர் புதையுயிரி படிவ அருங்காட்சியக வளாகத்தில் தானியங்கி டைனோசர் மாதிரிகளைக் கொண்டு திறந்தவெளியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கருப்பொருள் பூங்கா அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் சிறப்பு பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் வகையில், லெய்டன் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு மீண்டும் திரும்ப கொண்டு வரப்படும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் இடம்பெறும் வகையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சென்னையில் இணையவழி மூலம் பிரமாண்ட கலை விழா நடத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 5 செப் 2021