மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

8ஆம் வகுப்பு வரை பள்ளிகள்  திறப்பு எப்போது?

தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து 8ஆம் தேதிக்குப் பிறகு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது மிகமிக அவசியமானது. ஏனென்றால் ஒன்றாம் வகுப்பில் சேரக் கூடிய மாணவர்கள் நேரடியாக மூன்றாம் வகுப்பில் சேரும் சூழல் உள்ளது. அதனையும், கொரோனா பரவலையும் கருத்தில் கொண்டு தொடக்க நிலைப் பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரும் 8ஆம் தேதிக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது முக்கியமான ஒன்று என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள அணைக்கட்டி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் இன்று சௌமியா சுவாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது அவசியமான ஒன்று. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் கல்வி ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளி திறக்கப்படாத காரணத்தால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். ஒருவேளை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினார்.

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்று தெரிவித்த அவர் பொதுமக்கள் தொடர்ந்து மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, சுகாதார முறைகளைக் கையாள்வது, கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட செயல் முறைகளை கடைப்பிடித்தால் மூன்றாவது அலையிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.

-பிரியா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

ஞாயிறு 5 செப் 2021