மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: முழு வேகத்தில் திமுக, அதிமுக

உள்ளாட்சித் தேர்தல்: முழு வேகத்தில் திமுக, அதிமுக

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த தேர்தல்களை நடத்திமுடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அக்டோபருக்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறது தமிழக அரசு. இதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு செய்தது.

இந்த நிலையில் அதிமுக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களுக்கும் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. இதன் மூலம் அதிமுகவும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில்தான் நேற்று (செப்டம்பர் 4) மின்னம்பலத்தில் வெளியிட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய செயலாளர்களை சந்திக்கும் ஸ்டாலின் என்ற தலைப்பிட்ட செய்தியின்படி... இன்று (செப்டம்பர் 5) அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், அம்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

இன்று காலை அமர்வில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், அதன் பிறகான அடுத்த அமர்வில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பது பற்றியும், கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் மனக் கசப்புகள் பற்றியும் கேட்டறிந்தார் ஸ்டாலின். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கவுன்சில், ஒன்றிய கவுன்சில்களில் நாம் எவ்வளவு ஜெயிக்க முடியும், மக்கள் ஆட்சி பற்றிஎன்ன சொல்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார் ஸ்டாலின்.

பல ஒன்றிய செயலாளர்கள், ‘அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஊராட்சி கிளர்க்குகள் திமுகவினர் சொல்வதை செய்ய மறுப்பதாகவும், பல பிடிஓக்கள் இன்னமும் அதிமுகவினர் சொல்வதையே கேட்டு நடந்து வருவதாகவும் ஸ்டாலினிடம் புகார்களைத் தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடக்கும் விஷயங்களைத் தெரிந்துகொண்ட ஸ்டாலின், “நம் வேட்பாளர்கள் 100 சதவிகிதம் ஜெயிக்க வேண்டும்” என்று மாசெக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

ஞாயிறு 5 செப் 2021