மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 5 செப் 2021

‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’: ஒன்றிய அமைச்சர்!

‘ஒரு குடும்பம் ஒரு குழந்தை’: ஒன்றிய அமைச்சர்!

ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டத்தை உறுதி செய்யும் மசோதாவைக் கொண்டுவரப் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஒன்றிய சமூக நீதித் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று (செப்டம்பர் 4) தெரிவித்தார்.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே மக்கள் அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை பற்றிப் பேச முடியும் என்று சமீபத்தில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியிருந்தார். தற்போது குஜராத் சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவிடம் இந்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ராம்தாஸ் அத்வாலே, “இந்து மக்கள் தொகை குறைய வாய்ப்பில்லை. இந்துக்கள் இந்துவாகவும், முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும் தான் இருக்கிறார்கள். அரிதாக ஒன்று அல்லது இரண்டு இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள் மதம் மாறுகிறார்கள். அரசியலமைப்பு மக்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்ய உரிமை அளிக்கிறது, ஆனால் யாரும் எந்த நபரையும் மதம் மாற கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கான மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவித்த அவர், இந்தியக் குடியரசுக் கட்சி ஒரு குழந்தை கொள்கையை ஆதரிக்கிறது. இதனைப் பின்பற்றினால் மக்கள் தொகையைக் குறைக்க முடியும்,

இதற்காக ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை’ உறுதிசெய்யும் சட்ட மசோதாவைக் கொண்டு வர வேண்டும்.

எனவே பிரதமரைச் சந்தித்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவைக் கொண்டுவரக் கோரிக்கை வைக்கப்படும். எங்கள் கட்சி சார்பில் இதற்கான சட்ட முன்வடிவு பிரதமரிடம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 5 செப் 2021