மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்!

மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம்!

தமிழ்நாட்டில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும் அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும்பொருட்டு கடற்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என்று வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று(செப்டம்பர் 3) வனத் துறை மற்றும் விளையாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதில் வனத் துறை தொடர்பாக அமைச்சர் ராமச்சந்திரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வனவிலங்குகளுக்கான உயர் வனவிலங்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்.

வனத்துறையின் தேவைகள், சிறந்த மேலாண்மைக்காக தமிழ்நாடு வனத் துறை நடவடிக்கைகள் மின்னணு மயமாக்கப்படும்.

வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தென்மாவட்ட யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்கும்பொருட்டு அகத்தியர் மலையில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் அழிந்துவரும் நிலையில் உள்ள மிக அரிதான கடற்பசு இனத்தையும், அதன் கடல் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் பொருட்டு கடற்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும்.

கடல்வாழ் விலங்கு வேட்டை தடுத்தல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் குற்றங்களை தடுக்க சிறப்பு கடல்சார் உயர் இலக்கு படை உருவாக்கப்படும்.

வன உயிரின குற்றங்களை கண்டறிந்து தடுக்க, வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாடு பிரிவு ஏற்படுத்தப்படும் உள்ளிட்ட 12 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

-வினிதா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

சனி 4 செப் 2021