மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

வாக்காளர்  பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களின் புதிய வாக்காளர் பட்டியல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 9 மாவட்டங்களில் மொத்தம் 37,77,524 ஆண்கள், 38,81,361 பெண்கள், 835 திருநங்கைகள் என மொத்தம் 76,59,720 வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 4) வெளியிட்ட அறிவிப்பில், “புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்காக 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் 31.08.2021 அன்று வெளியிடப்பட்டன.

மேற்கண்ட வாக்காளர் பட்டியலைத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in யில் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற விவரங்களை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

19.03.2021 அன்று வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனில், முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களைச் சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களைச் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

இவ்வாறு புதிதாகச் சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே அவரது பெயர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் உரியவாறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதால், தொடர்புடைய சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலரைத் தொடர்புகொண்டு பெயர் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்ற தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஒன்றிய செயலாளர்களை சந்திக்கும் ஸ்டாலின்

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

சனி 4 செப் 2021