மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

ரூ.150 கோடியில் கல்லூரிகள்: அமைச்சர் சேகர்பாபு

ரூ.150 கோடியில் கல்லூரிகள்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை உட்பட 10 இடங்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.150 கோடியில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இன்று(செப்டம்பர் 4) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறைத் தொடர்பாக பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருக்கும்பட்சத்தில், அந்த திருமணத்தை கோயில்களில் நடத்தக் கட்டணம் இல்லை.

கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்துக்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

கோயில்களில் மொட்டை அடிக்க இனிக் கட்டணம் இல்லை. இது நாளை முதல் அமலுக்கு வரும்.

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோயில்களில் முழு நேர அன்னதான திட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.

சென்னை உட்பட 10 இடங்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.150 கோடியில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

சூரிய ஒளி வெப்ப விளக்குகள் தேவைப்படும் அனைத்து கோயில்களிலும் பொருத்தப்படும்.

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடி செலவில் பன்னோக்கு கட்டடம் உருவாக்கப்படும்.

திருக்கோயில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ வசதி, உணவு, குளியல் வளாகம், நடைபயிற்சி வசதி மற்றும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.

அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் அமைக்கப்படும்.

அர்ச்சகர், ஓதுவார்களுக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை, இனி 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழகத்தில் இந்த வருடத்திற்குள் ரூ.1,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்படும்.

திருக்கோயில்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த 1500 தற்காலிக பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள்.

திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார், கலைஞர் சட்டமாக்கினார். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி நவீன ராமானுஜராக திகழ்கிறார் என்று கூறினார்.

பொதுவாழ்வில் அடைக்கலம் தேடி வந்த தனக்கு புதுவாழ்வு தந்த முதல்வரிடம் ஒன்றை மட்டும் கேட்கிறேன். என்னை இயற்கை இறுதியாக அழைக்கும்போது முதல்வர் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மட்டும் வந்தால் போதும் என்று மனதுருகி பேசிய அமைச்சர் சேகர்பாபு, ராமனுக்கு அனுமான் இருந்ததுபோல் உங்களுக்கு நான் இருப்பேன் என்று முதல்வரை பார்த்து கூறினார்.

இந்த பேச்சு அவையில் இருந்தோரை நெகிழ்ச்சி அடைய செய்தது.

-வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

சனி 4 செப் 2021