மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

மெரினாவில் படகு சவாரி: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

மெரினாவில் படகு சவாரி: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன்.

சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 04) இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, தொழிலாளர் நலன்துறை ஆகிய துறைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது சுற்றுலாத் துறை சார்ந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் மதிவேந்தன், "மெரினா கடற்கரையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து, மோட்டார் படகுகள், அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள 75 சுற்றுலாத்தலங்கள் விளம்பரப்படுத்தப்படும்.

தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்படும்.

சுற்றுலாத் துறை சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும்.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள 133அடி திருவள்ளுவர் சிலையை மேலும் அழகுப்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டு மகிழ லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும்.

முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

பிச்சாவரம் சுற்றுலாத் தலம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

ஜவ்வாது மலைப் பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.

ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

சனி 4 செப் 2021