மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

விநாயகர் சதுர்த்திக்குத் தடை ஏன்?: சேகர்பாபு

விநாயகர் சதுர்த்திக்குத் தடை ஏன்?:  சேகர்பாபு

விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாடத் தடை விதித்தது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் பதிலளித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. ஆனால் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெறும் இந்து சமய அறநிலையத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, "விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தத் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த வேண்டும்", என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கொரோனா மூன்றாம் அலை உருவாகும் சூழல் இருப்பதால், மக்கள் அதிகளவு கூடும் வகையில் விழாக்களை நடத்தத் தடை விதிக்க வலியுறுத்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு நடத்தப் பரிசீலனை செய்யப்படும்” என்று கூறினார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

சனி 4 செப் 2021