மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

பஞ்சு மீதான 1% வரி ரத்து!

பஞ்சு மீதான 1%  வரி ரத்து!

நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 4) அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் 110 விதியின் கீழ் முதல்வரும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் பஞ்சு மீதான நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

மேலும் அந்த அறிவிப்பில், “இந்தியத் துணித் தொழில் வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாடு துணித் தொழில் வகிக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள நூற்பாலைகளின் எண்ணிக்கை 1,570 ஆகும், இவ்வாலைகள் மூலம் நூற்கப்படும் நூல், நாட்டின் மொத்த நூற்புத் திறனில் 45 விழுக்காடு ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95 விழுக்காடு பிற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனை (ஒழுங்குமுறை) சட்டம் 1987, பிரிவு 24-ன்படி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சின் விற்பனை மதிப்பு மீது சந்தை நுழைவு வரியாக ஒரு விழுக்காடு விதிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தின்படி, பருத்தி பொதி, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு ஆகியவை வேளாண் பொருட்களாகக் கருதப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள சந்தைப் பகுதிகளில் கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்படும் பொழுது 1 விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) விதிக்கப்படுகிறது. சந்தை நுழைவு வரி என்பது, பருத்திப் பொதிகள் மீது மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மாறாக, பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு போன்ற உற்பத்தி பொருட்கள் மீதும் 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி விதிக்கப்படுகிறது.

இதனால் வெளி மாநிலங்களிலிருந்து பஞ்சு கொள்முதல் செய்யப்படும் பொழுது சிறு, குறு நூற்பாலைகள் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சின்மீது விதிக்கப்படும் சந்தை நுழைவு வரியை நீக்க வேண்டுமென்பது தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் நெடுநாள் கோரிக்கை ஆகும்.

இதனால், மாநிலத்தில் இந்தியப் பருத்திக் கழகம் பஞ்சு நூல் விற்பனையை மேற்கொள்ளும்பொழுது, நூற்பாலைகள் பெரிய அளவிலான பஞ்சு இருப்பினைப் பராமரிக்க வேண்டியதில்லை.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளர்களுடன் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டங்களில், இந்த வரியினை நீக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதனைக் கருத்தில் கொண்டு, பஞ்சு, கழிவுப் பஞ்சு மீதான ஒரு விழுக்காடு வரி (சந்தைக் கட்டணம்) ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உரிய சட்டத்திருத்தம் இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

சனி 4 செப் 2021