மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

பள்ளிகள் திறந்ததால் கொரோனா பரவுகிறதா?

பள்ளிகள் திறந்ததால் கொரோனா பரவுகிறதா?

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்தவுடன் தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது தவறான கருத்து என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி மடுவின்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக இன்று (செப்டம்பர் 4) நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது.

சென்னையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் பிரச்சனையே இல்லாத சென்னையாக மாற்றப்படும். 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

தடுப்பூசி குறித்து பேசிய அவர், “கேரள எல்லைப் பகுதியில் உள்ள 9 கிராமங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் 100 சதவிகிதம் தடுப்பூசி போடுவதற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறந்தவுடன்தான் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சொல்லப்படுவது தவறானது. பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவது என்பது சாத்தியமற்ற ஒன்று. ஏற்கனவே தொற்று இருப்பவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

செப் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கல்லூரி மாணவி ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 4 செப் 2021