மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 செப் 2021

கல்லூரி நண்பரை நலம் விசாரித்த முதல்வர்!

கல்லூரி நண்பரை நலம் விசாரித்த முதல்வர்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன்(66). 'வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார்.

சென்னை, சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்.மகேஷ் பொய்யாமொழி, திமுக தலைமை நிலைய செயலாளரும்,நடிகர் சங்க பிரமுகருமான பூச்சி எஸ்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதுபற்றி டி.பி.கஜேந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நானும், முதல்வர் ஸ்டாலினும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஒரே வகுப்பு தோழர். என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னை வந்து சந்தித்தார். மற்றபடி வேறொன்றும் இல்லை என்றார்.

எனினும், மு.க.ஸ்டாலின் வீடுவரை வந்து நலம் விசாரித்தது பற்றி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்

முத்துவேலர் பேரனே

முத்தமிழ் அறிஞரின் மைந்தனே

கழகத்தின் தளபதியே

தமிழகத்தின் முதல்வனே

உன் நல்லாட்சியில் வாழும்

நான் ஒரு சிறு குடிமகன்

தூரத்திலிருந்து உன் முகம் பார்த்து

துன்பத்தை துரத்தும் சிறியவன்

கல்லூரி காலத்தில்

புத்தகம் பார்த்து படித்ததை விட

உன் முகம் பார்த்து படித்தது ஏராளம்

படங்களை நான் இயக்கினாலும்

என்னை இயக்கியது நீங்களல்லவா?

குசேலனை தேடி வந்த

கிருஷ்ணன் போல

என் வீடு தேடி வந்தாய்

நான் வீடுபேறு அடைந்தேன்

நலம் விசாரித்து, நற்பரிசு தந்து

நானிலம் போற்ற நின்றாய்

நீங்கள் என் நண்பன் என்பதே

நான் பெற்ற செல்வம்

நட்புக்கு இலக்கணம் வகுத்தவனே

வாழும் நாளெல்லாம்

உனை நினைப்பேன்

உனை மறக்க நேரிடின் மரிப்பேன்

அன்புடன்

டி.பி.கஜேந்திரன்.

முதல்வருடன் வந்து

முழு அன்பைத் தந்த

பொய்யாமொழியின் புதல்வருக்கும்,

கழகத்தின் செயல்வீரர் பூச்சி முருகனுக்கும்

நன்றிகள் கோடி.

என்று குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

சனி 4 செப் 2021