மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

கொடநாடு வழக்கில் சசிகலா, எடப்பாடியை விசாரிக்க வேண்டுமா?

கொடநாடு வழக்கில் சசிகலா, எடப்பாடியை விசாரிக்க வேண்டுமா?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவைப்பட்டால் யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம் என்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் அவ்வழக்கின் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் நேற்று (செப்டம்பர் 2) தெரிவித்தார்.

இந்த நிலையில் கொடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) புதிய உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கூடலூர் சுனில் ஆகிய 9 பேரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். மனுதாரர்கள் சார்பில், “நாங்கள் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொடர்பு குறித்து சயான் பேசிய நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது.

மேலும், கொடநாடு எஸ்டேட்டைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் ஜெயலலிதாவும், சசிகலாவுமே. ஜெயலலிதா தற்போது உயிரோடு இல்லாத நிலையில், எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு நன்கு தெரியும். எனவே அவர்களையும் இந்த வழக்கை முறையாக விசாரிக்கத் தவறிய அப்போதைய ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “வழக்கில் மேலும் சிலரை எதற்காக விசாரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை மனுதாரர்கள் விளக்கமாக கூறவில்லை” என நீதிபதி சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக மனுதாரர்கள் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மூவரின் வழக்கு குறித்து மூன்று வாரங்களில் சோலூர்மட்டம் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

-வணங்காமுடி

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 3 செப் 2021