மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

ரூ.5 லட்சத்துடன் ’கப்பலோட்டிய தமிழன் விருது’!

ரூ.5 லட்சத்துடன் ’கப்பலோட்டிய தமிழன் விருது’!

ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் ‘கப்பலோட்டிய தமிழன் விருது’ வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(செப்டம்பர் 3) விளையாட்டு துறை மற்றும் வனத் துறை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

இன்று சட்டப்பேரவையில் உறுப்பினர் ஈஸ்வரன், வ.உ.சி. அவர்களுடைய 150-வது பிறந்த நாள் வருகின்றது. எனவே, அதனை அரசு விழாவாக, அவரைப் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி. அவர்களுடைய 150வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, விதி 110ன் கீழ் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரை கெளரவிக்கும் வகையில் 14 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

தூத்துக்குடியில் உள்ள பெரிய காட்டன் சாலை இனி, ‘வ.உ.சி சாலை’ என பெயர் மாற்றப்படும்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சி பெயரில் புதிய ஆய்வறிக்கை வெளியிடப்படும்.

இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5 2022 வரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓராண்டுக்கு கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு வ.உ.சி பெயர் சூட்டப்படும்.

கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு சிறப்பாக பங்காற்றி வரும் தமிழருக்கு ஆண்டுதோறும் வ.உ.சி பெயரில் ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசுடன் “கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது” வழங்கப்படும்.

கோவை வ.உ.சி பூங்காவில் அவருக்கு முழு உருவச் சிலை அமைக்கப்படும்.

இவர் எழுதிய நூல்கள் புதுப்பொலிவுடன் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.

வ.உ.சி நினைவு நாளான நவம்பர் 18 ஆம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும். வ.உ.சி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும்.

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வெள்ளி 3 செப் 2021