மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

மாணவிக்கு கொரோனா : அச்சத்தில் பெற்றோர்கள்!

மாணவிக்கு கொரோனா : அச்சத்தில் பெற்றோர்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். பள்ளிகளின் நுழைவு வாயிலில் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பள்ளிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து மாணவிக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, மாணவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து, பள்ளி மூடப்பட்டு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் ஆசிரியை மற்றும் மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை நாம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. மாணவர்கள் என்பவர் தனிப்பட்டவர் அல்ல. முதியவர்கள், சிறுவர்கள் இருக்கக் கூடிய குடும்பத்திலிருந்து தான் அவர்களும் வருகின்றனர். பள்ளியில் கூட்டமாக இருக்கின்றனர், பள்ளி முடிந்த பிறகு திரும்ப வீட்டிற்கு செல்லும்போது இவர் மூலம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வீட்டில் முகக்கவசம் அணிவதில்லை மற்றும் சமூக இடைவெளியை நாம் கடைபிடிப்பதில்லை. அதனால், இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்துகிறது என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 3 செப் 2021