மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: முக்கிய அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தல்: முக்கிய அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுவதாகத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2019ல் தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு சார்பில் மேலும் 6 மாதம் கால அவகாசம் கோரப்பட்டது. எனினும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டு, சமீபத்தில் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட்டது.

தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்காளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

வழக்கமாகக் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 மணி நேரத்திற்கும் குறையாமல் வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 3 செப் 2021