மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 செப் 2021

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது. அப்போது, துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த கொள்கை குறிப்பில், “தமிழ்நாடு அரசு மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஏழை மாணவர்களுக்குக் கிடைப்பதில் உள்ள சிரமங்களைக் கருத்தில்கொண்டு முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்தார்.

இந்தக் குழு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வினை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை, சமூக பொருளாதார மற்றும் கூட்டாட்சி முறையை மோசமாகப் பாதிக்கிறதா, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் வேறு பிரிவு மாணவர்களைப் பாதிக்கிறதா என்பதையும் அவற்றை களைய எடுக்கப்பட வேண்டிய தகுந்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தது. தொடர்ந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி ஆய்வின் பரிந்துரையை அரசுக்கு வழங்கியது.

இந்தப் பரிந்துரைகளை ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, நீட் தேர்வைப் புறந்தள்ளத் தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007ஐ போன்றதொரு புதிய சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற முயற்சிக்கலாம் என இக்குழு பரிந்துரைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வெள்ளி 3 செப் 2021