மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலை: அமைச்சர் மா.சு

சென்னைக்கு அருகே  சித்த மருத்துவ பல்கலை: அமைச்சர் மா.சு

இந்தியாவில் முதன்முறையாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகே அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 2) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் பேசுகையில், 'தமிழகத்தில் பழமையான மருத்துவ முறையான சித்த மருத்துவத்தைப் போற்றும் வகையில் தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாகச் சித்த மருத்துவத்திற்குப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் அமைக்கப்படும். அதில் ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா ஆகியவை இடம்பெறும் என்று அறிவித்தார்.

மேலும், 1,583 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 266.73 கோடி ரூபாயில் தமிழகத்தில் அமைக்கப்படும். ரூ.5.10 கோடியில் புதிதாக ஆர்டிபிசிஆர் கருவிகள் வாங்கப்படும். ரூ.69.18 கோடியில் 188 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.

முதலமைச்சர் காப்பீடு திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,248 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.

எச்.ஐ.வி, எய்ட்ஸ் தடுப்பு ஆதரவு பராமரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.128.27 கோடி ஒதுக்கப்படும்.

ரூ.70 கோடியில் 389 நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் வாங்கப்படும். ரூ.4,280 கோடியில் வட்டார, நகர்ப்புற மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் ரூ.258 கோடியில் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

-பிரியா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வியாழன் 2 செப் 2021