மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

சுங்கச்சாவடிகளைக் குறைக்க நடவடிக்கை : அமைச்சர் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளைக் குறைக்க நடவடிக்கை : அமைச்சர்  எ.வ.வேலு

தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழகத்திலுள்ள 24 சுங்கச்சாவடிகளில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏற்கனவே உள்ள கட்டணங்களை விட தற்போது 5ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 2) மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகளில் உள்ளது. இவற்றில் பல சுங்கச்சாவடிகளின் காலம் முடிவுற்ற பிறகு 15 ஆண்டுகளைக் கடந்தும், கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

சுங்கச் சாவடிகளில் கந்துவட்டி போல் ஏழை மக்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை மக்கள் மீது பொருளாதார போர் தொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, “கேரளாவில் நெடுஞ்சாலைகளின் தூரத்தைக் கணக்கிட்ட போது 5ஆக இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 3 ஆகக் குறைக்கப்பட்டது.

அதுபோன்று தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் தூரத்தைக் கணக்கிடும் போது 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. எனவே, மீதமுள்ள 32 சுங்கச்சாவடிகளை நீக்குவதற்கும் சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைப்பதற்கும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வியாழன் 2 செப் 2021