மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

பொதுத்துறை சொத்துகளை விற்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

பொதுத்துறை சொத்துகளை விற்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை விற்கக்கூடாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின் கீழ் வருவாய் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களான விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தனியார் முதலீட்டை அனுமதித்து அதன் மூலம் லட்சம் கோடி ரூபாயைத் திரட்டும் முடிவில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. அதாவது அரச சொத்துக்களைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டு நான்கு ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு பல்வேறு மாநில முதல்வர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 70 ஆண்டுகளாக இந்தியா உருவாக்கிய சொத்துக்களை வெறும் ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்று விட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாழாக்கியவர்கள், அதை எப்படி மீட்பது என்று தெரியாமல் வேறு வழியின்றி அனைத்தையும் தனியாரிடம் கொடுக்கிறார்கள் என்று விமர்சித்தார்.

இந்த சூழலில் இன்று, நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பது தொடர்பாகக் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது, துறைமுகங்கள், விமான நிலையங்களை விற்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. இதனைத் தடுத்து நிறுத்தி பொதுத்துறை சொத்துக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “பொதுத்துறை சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதை திமுக அரசு ஒருபோதும் ஏற்காது. தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளின்போது ஒன்றிய அரசு மாநில அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும். லாபகரமாக இயங்கும் தொழிற்சாலைகளை விற்க முயல்வதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்கும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் நம் அனைவரின் சொத்தாகும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. பொருளாதார நலனுக்கும் சிறுகுறு தொழிலுக்கும் ஆணிவேராக பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களைத் தனியார் மயமாக்குவதைக் கைவிடக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளேன்” என்று கூறினார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வியாழன் 2 செப் 2021