மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

சபாநாயகருக்கே அதிகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சபாநாயகருக்கே அதிகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டமன்ற உறுப்பினர்களை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது குறித்து சபாநாயகருக்கு மட்டும் தான் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தனி இருக்கை வழங்கக் கூடாது, சட்டப்பேரவையில் பேசுவதற்குத் தனியாக நேரம் ஒதுக்கக் கூடாது , உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களாகக் கருதக்கூடாது என்று கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டப்பேரவையில் உறுப்பினர்களை எங்கு எப்படி அமர வைப்பது, எப்படி கட்சி பிரதிநிதித்துவம் கொடுப்பது போன்ற முடிவுகள் முழுக்க முழுக்க சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று தெரிவித்தனர்.

இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவில் பொது நலனும் இல்லை, எனவே மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

-பிரியா

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 2 செப் 2021