மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

கொடநாடு கொலை: யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம்!- அரசு வழக்கறிஞர்!

கொடநாடு கொலை: யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம்!- அரசு வழக்கறிஞர்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை என்று ஆகஸ்டு 27 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், திட்டமிட்டப்படி இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 2) ஊட்டி (உதகமண்டலம்)யில் உள்ள நீலகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி சஞ்சய் பாபா இவ்வழக்கை விசாரித்து வருகிறார். இவ்வழக்கில் ஜாமீனில் இருக்கும் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான சயான், குன்னூர் சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் வாலையாறு மனோஜ் ஆகியோர் ஆஜரானார்கள். மற்ற எட்டு பேரும் கேரளாவில் கொரோனா பரவலால் வரவில்லை.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள், அதிமுகவின் வழக்கறிஞர்கள் என நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

விசாரணைத் தொடங்கியதும் அரசுத் தரப்பில், “இந்த வழக்கில் மேல் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதை முடித்துவிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்று நீதிபதி வழக்கை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் ஷாஜகான்,

“இந்த வழக்கு சம்பந்தமாக மேல் புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு அனுமதி உண்டு என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மேல் புலன் விசாரணை தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் இவ்வழக்கிலே சதித் திட்டம் தீட்டியது யார் என்பது முக்கியம். ஒரு சில விஷயங்கள் இந்த நீதிமன்றத்திலே மறைக்கப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டவரே நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார். அந்த அடிப்படையில் மேல் புலன் விசாரணை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு இந்த நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இவ்வழக்கில் மேல் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். கிடைக்கின்ற ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் முழுமையாக ஆராய்ந்து... தேவைப்படுகிறது என்றால் யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம்” என்று கூறினார் அரசு வழக்கறிஞர் ஷாஜகான்.

யாரை வேண்டுமானாலும் விசாரிப்போம் என்பதன் வாயிலாக இந்த வழக்கில் அரசியல் முக்கியப் புள்ளிகளும் கூட விசாரிக்கப்படலாம் என்கிறார்கள் வழக்கறிஞர் வட்டாரத்தில்.

-வேந்தன்

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வியாழன் 2 செப் 2021