மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

சென்னை பெருநகரம் விரிவாக்கம்: அமைச்சர் முத்துசாமி

சென்னை பெருநகரம் விரிவாக்கம்: அமைச்சர் முத்துசாமி

சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் முத்துசாமி,

“சென்னை பெருநகர எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டு வரும் விரைவான வளர்ச்சி மற்றும் அதற்கான உள்கட்டமைப்பு தேவைகளைக் கருத்தில் கொண்டு திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில பகுதிகள் மற்றும் அரக்கோணத்தை உள்ளடக்கி சென்னை பெருநகரப் பகுதியை விரிவாக்குதல் குறித்து பொதுமக்கள் கருத்தினைப் பெற்று விரிவாக்கம் செய்யப்படும்” என்று அறிவித்தார்.

மேலும், “ஈசிஆர் -ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் ஒக்கியம், துரைப்பாக்கம் கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்துக்கும் இடையே ஏற்கெனவே உள்ள சாலைகளை அகலப்படுத்தி பக்கிங்ஹாம் கால்வாய் மீது சுமார் ரூ.180 கோடி செலவில் உயர்மட்ட சுழற்சாலை வகை மேம்பாலம் அமைக்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் அல்லது மத்திய வருவாய்ப் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

சென்னை மற்றும் இதர நகரங்களில் பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்துள்ள குடியிருப்புகள், தொழில்நுட்ப குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் 4 ஆண்டுகளில் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சிதிலமடைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் நடப்பு நிதியாண்டில் ரூ.1200 கோடியில் மறு கட்டுமானம் செய்யப்படும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,610 கோடியில் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அடுக்குமாடி திட்டப்பகுதியில் உள்ள தரைதள குடியிருப்புகள் மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கேற்ப அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வியாழன் 2 செப் 2021