மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 2 செப் 2021

ஓபிஎஸ் வீட்டில் தினகரன்

ஓபிஎஸ் வீட்டில் தினகரன்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி அம்மையார் நேற்று (செப்டம்பர் 1) காலமான நிலையில், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா உள்ளிட்டோர் பன்னீருக்கு ஆறுதல் தெரிவித்து. அவரது மனைவிக்கு அஞ்சலி செலுத்திச் சென்றார்கள்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் விஜயலட்சுமியின் உடல் சென்னையில் இருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பெரியகுளத்தில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் பழைய வீட்டில் விஜயலட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அங்கே ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர்.

இரவு 11 மணிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், ஒரு காலத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிகவும் வேண்டியவராக இருந்தவருமான டிடிவி தினகரன் பெரியகுளத்தில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்குச் சென்றார்.

அவரைக் கண்டதுமே.... ‘சார்’ என்று உடைந்துபோய் அழத் தொடங்கினார் ஓபிஎஸ். அவருக்கு ஆறுதல் தெரிவித்த தினகரன் அங்கேயே சுமார் அரைமணி நேரம் இருந்து ஓ.பிஎஸின் மகன்கள், குடும்பத்தினர் என அனைவரிடமும் தன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

டிடிவி தினகரனின் மகளுக்கு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திருமணம் வைத்திருக்கிறார். ஏற்கனவே நடக்க இருந்த திருமணம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திருமண வீட்டார் யாரும் இதுபோன்ற துக்க நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று ஒரு மரபு இருக்கிறது. ஆனால் அதையும் உடைத்து, ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி காலமானதை ஒட்டி அஞ்சலி செலுத்த வந்துவிட்டார் டிடிவி தினகரன் என்று அந்த நள்ளிரவிலும் பன்னீர் வீட்டு வாசலில் பேசிக் கொண்டார்கள் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும்.

-வேந்தன்

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வியாழன் 2 செப் 2021