மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

போட்டியின்றி தேர்வாகிறார் எம்.எம்.அப்துல்லா

போட்டியின்றி தேர்வாகிறார் எம்.எம்.அப்துல்லா

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை பதவிக்கு திமுகவைச் சேர்ந்த எம்.எம் அப்துல்லா போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜானின் மறைவைத் தொடர்ந்து அந்த மாநிலங்களவை எம்.பி இடத்திற்கு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அறிவித்தார்.

இன்று (செப்டம்பர் 1) இதுதொடர்பாக, தமிழக சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், “மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து வரப்பெற்ற வேட்பு மனுக்கள் முற்பகல் 11.00 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆய்வுக்குப் பின் திமுகவைச் சார்ந்த முகமது அப்துல்லா வேட்பு மனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது. ந.அக்னி ஸ்ரீராமசந்திரன், கு.பத்ம ராஜன், கோ.மதிவாணன் ஆகிய மூன்று சுயேச்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் மாநிலங்களவைக்கு எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்வு ஆகிறார். இதுகுறித்து நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகவுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் 132 பேர் உள்ளனர். கூட்டணி கட்சியினர் பலம் 26ஆக உள்ளது. எனவே திமுகவைச் சேர்ந்த எம்.எம் அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை பதவிக்குத் தேர்வாவது உறுதியாகியுள்ளது.

-பிரியா

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 1 செப் 2021