மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா

ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மறைவுக்கு ஓபிஎஸை நேரில் சந்தித்து அதிமுகவின் முன்னாள் பொது செயலாளர் சசிகலா ஆறுதல் கூறினார்.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி கடந்த 10 நாட்களாகச் சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 1) காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவருக்கு முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி ஓபிஎஸுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மனைவியைப் பிரிந்து மீளா துயரில் இருக்கும் ஓபிஎஸுக்கு பலரும் ஆறுதல் கூறி வரும் நிலையில், சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்வி காலை முதலே அரசியல் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

இந்நிலையில் பிற்பகல் 12.23 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த சசிகலா, ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, ஓபிஎஸை சந்தித்து, அவரது கையை பிடித்து ஆறுதல் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்திடம் அவரின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மாரடைப்பு குறித்து சசிகலா கேட்டறிந்தார்.

விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில், சசிகலா வரும் வரை ஓபிஎஸ் மருத்துவமனையில் காத்திருந்தார். முன்னதாக சசிகலா வரும் தகவல் கிடைத்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டார்.

சசிகலா வந்து ஆறுதல் கூறியதைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் உடலைப் பெரியகுளத்துக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா மருத்துவமனைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 1 செப் 2021