தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம்!

politics

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இனி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, குடிசை மாற்று வாரியம் இனி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

மேலும் இன்று வெளியிடப்பட்ட குடிசை மாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில், தமிழ்நாட்டில் 9 இடங்களில் மொத்தம் ரூ.950 கோடியில் சுமார் 6,000 குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப் பகுதிகளில் 28,247 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்கத் தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது

வண்டலூர் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்.

கோயம்பேடு அங்காடி வளாகத்தில் தொழிலாளர்களுக்கான உணவகம்,தங்கும் விடுதி 2 கோடி ரூபாயில் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *