மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் பொன்முடி

கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் பொன்முடி

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் அண்ணா பல்கலை மாணவர்களுடன் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துரையாடினார்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் இன்று(செப்டம்பர் 1) அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு நிபந்தனைகளுடன் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வமுடன் வருகை தந்தனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரிகளுக்கு வருவது குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆன்லைன் கிளாஸ் பிடித்திருக்கிறதா? வகுப்புகளுக்கு வருவது பிடித்திருக்கிறதா? என்று மாணவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள் வகுப்புகளுக்கு வருவது பிடித்திருக்கிறது என்று பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் 7ஆம் பருவ மாணவர்களுக்கான ஆய்வு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டேன்.

50பேர் இருக்கக் கூடிய வகுப்பறையில் 25 பேருடன் வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுதான் கல்லூரிக்கு வர வேண்டும். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கலாம். அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிடப்படும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 1 செப் 2021