மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

சிலிண்டர் விலை ரூ.900த்தை தாண்டியது!

சிலிண்டர் விலை ரூ.900த்தை தாண்டியது!

சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டதால், 14.2 கிலோ எடையுடைய ஒரு சிலிண்டரின் விலை ரூ.900த்தை தாண்டி விற்பனையாகிறது.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், சமையல் சிலிண்டரின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

கடந்த ஓராண்டுக் காலத்திற்குள் சிலிண்டரின் விலை 290 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.

2020 செப்டம்பரில் 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரின் விலை 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 900.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. வணிக அளவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலை ரூ.75 உயர்ந்து ரூ.1,831க்கு விற்கப்படுகிறது.

ஏற்கனவே விலைவாசி உயர்வு, கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு மாதம்தோறும் சிலிண்டர் விலையை உயர்த்தி அரசு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 1 செப் 2021