மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

கனிமங்களைக் கண்காணிக்கச் சிறிய ரக விமானங்கள்!

கனிமங்களைக் கண்காணிக்கச் சிறிய ரக விமானங்கள்!

கனிம வளங்களை வேறு மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பொது மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று (ஆகஸ்ட் 31) நீர்வள மற்றும் கனிமவளத் துறை மீதான விவாதம் நடைபெற்றது.

அதில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ், கன்னியாகுமரியில் மலைகள் உடைக்கப்பட்டு கனிமவளங்கள் கேரளாவுக்குக் கடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்ல, கனிமங்களை எடுத்துச் செல்ல தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருப்பதாக கூறிய அவர், எனினும் கனிம வளங்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், “பயனற்ற பழைய சுரங்கம் மற்றும் குவாரிகளை பொதுமக்களுக்குப் பயனுள்ள அமைப்புகளாக மாற்றப்படும்.

விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கனிமங்கள் எடுப்பதைத் தடுக்க ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

கட்டுமானப் பணிகளில் ஆற்று மணலுக்குப் பதிலாக தற்போது எம்.சாண்ட் உபயோகம் அதிகரித்து வருகிறது. எனவே, தரமற்ற எம்.சாண்டினை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கவும், கண்காணித்திடவும் எம்.சாண்ட் தயாரிப்பு, தரம், விலை மற்றும் அவற்றைக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த மாநில அளவில் புதிய கொள்கை ஒன்று உருவாக்கப்படும்.

சுரங்கம் பகுதியில் மலை போல் குவிந்து கிடக்கும் கிரானைட் கழிவு கற்களை அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கிராபைட் சுரங்கம் மற்றும் ஆலையின் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.

ஜிப்சம் கனிம இருப்புப் பகுதிகளைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ரூ.20 லட்சத்தில் நவீன நில அளவைக் கருவி கொள்முதல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

புதன் 1 செப் 2021