மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 1 செப் 2021

பள்ளி திறப்பைக் கண்காணிக்க மாவட்ட அதிகாரிகள் நியமனம்!

பள்ளி திறப்பைக் கண்காணிக்க மாவட்ட அதிகாரிகள் நியமனம்!

பள்ளிகள் திறக்கப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதையடுத்து இன்று (செப்டம்பர் 1) முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. அனுமதி வழங்கினாலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதி. ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி 50 சதவிகிதப் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது. மாணவர்களை உளவியல் ரீதியாகத் தயார்படுத்தும் வகையிலும், பழைய பாடங்களை நினைவில்கொள்ளும் வகையிலும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு முதல் 45 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். அதற்கான புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்களிடையே சிறு அச்சம் இருந்தாலும், இதுவரை யாரும் வெளிப்படையாக அதைக் காட்டவில்லை. இதை மனதில் வைத்தே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், "மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம்” என்று கூறினார்.

அதுபோன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பான வழக்கொன்றில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படும். அதன்மூலம் அவர்களுக்கு பாடங்கள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதைக் கண்காணிக்க மாவட்டம்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 37 மாவட்ட அதிகாரிகளை பள்ளிக்கல்வித் துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் திறக்கப்படுகிறதா? வகுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? மாணவர்கள் வருகை எவ்வாறு இருக்கின்றன? உள்ளிட்டவற்றை கண்காணித்து பள்ளிக்கல்வித் துறைக்கு இவர்கள் அறிக்கை அளிப்பார்கள்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 1 செப் 2021