மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 31 ஆக 2021

தமிழக அரசின் வலிமை அப்டேட்!

தமிழக அரசின் வலிமை அப்டேட்!

வலிமை பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. அப்போது தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், ஆவடி பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் முதலீட்டில், டைடல் பார்க் நிறுவனம் அமைத்து வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமானப்பணி 2023 பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்படும்.

நீலகிரி கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு அபாய பகுதிகளைக் கண்டறிவதற்குப் புவி தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளச் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை திட்டமிட்டுள்ளது. நிலையான சுரங்க கொள்கை ஒன்று உருவாக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்கிடும் வகையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்ற ஒருங்கிணைந்த தொழில் நகரங்கள் நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

வலிமை என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அரசு சிமெண்ட் வணிகப் பெயருடன் வலிமை என்ற புதிய பெயர் கொண்ட சிமெண்ட் இந்த ஆண்டு வெளிச்சந்தையில் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்படும்.

விருதுநகரில் 400 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா அமைக்கப்படும்.

மின் வாகன உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் மின் வாகன கொள்கை வெளியிடப்படும்.

திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பில் ரூ.5.90 கோடியில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும்.

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்படும்.

மருத்துவ உபகரண தொழில் பூங்கா ஒன்று சிப்காட் ஒரகடம் தொழில் பூங்காவில் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

உப்பளத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மழைக்கால நிவாரணமாக ஆண்டு ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதுபோன்று, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில்,

’தீராக்காதல் திருக்குறள்’ என்ற பெயரில் ஊடகங்கள் வாயிலாகத் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காகச் சிறப்பு நிதியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் திறனறித் தேர்வு நடத்தி ஆண்டுதோறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகையாக மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும்.

திருக்கோயில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்.

தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்குத் தமிழில் பெயர் சூட்ட ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 31 ஆக 2021