மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 30 ஆக 2021

பள்ளி கல்லூரிகள் திறப்பு : மீண்டும் ஆலோசனை!

பள்ளி கல்லூரிகள் திறப்பு : மீண்டும் ஆலோசனை!

பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இதுதொடர்பாக முதல்வர் இன்று (ஆகஸ்ட் 30) ஆலோசனை நடத்தவுள்ளார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிலேயே படித்துக்கொண்டிருப்பதால், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆசிரியர்கள், 18 வயது நிரம்பிய மாணவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

“மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில் 90.11% ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதுபோன்று, அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளி ஆசிரியர்கள் குறைந்தபட்சமாக ஒரு தவணையாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 100% தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 30 ஆக 2021