மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

நாட்டுக்கே முன்னுதாரணம் சிவகங்கை: பிரதமர் பாராட்டு!

நாட்டுக்கே முன்னுதாரணம் சிவகங்கை: பிரதமர் பாராட்டு!

சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் கிராமம் நாட்டுக்கே முன் உதாரணமாக இருப்பதாகப் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 29) மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மன் கி பாத் எனும் ‘மனதின் குரலின் 80ஆவது நிகழ்ச்சியில் பிரதமர் இன்று உரையாடினார். அப்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தல், பயோகேஸ் உள்ளிட்டவை குறித்துப் பேசினார்.

அப்போது சிவகங்கை மாவட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ”நமது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் காஞ்சிரங்கால் பஞ்சாயத்தையே எடுத்துக் கொள்வோம்... இந்தச் சிறிய பஞ்சாயத்து என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள்... இந்த கிராமப்பஞ்சாயத்து, உள்ளூர் மக்களோடு இணைந்து குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஓர் உள்ளூர் செயல்திட்டத்தினை அமல் செய்திருக்கிறது. கிராமம் முழுவதிலிருந்தும் குப்பைகள் திரட்டப்படுகின்றன, இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் தங்கும் பொருட்கள் கிருமிநாசினியாக விற்பனை செய்யப்படுகின்றன.

கிராமத்தின் இந்த மின்னாலையின் திறன் ஒவ்வொரு நாளும் 2 டன் குப்பைகளைப் பதப்படுத்துகிறது. இதனால் உற்பத்தியாகும் மின்சாரம் கிராமத்தின் தெருவிளக்குகளுக்கும், இன்னும் பிற தேவைகளுக்கும் பயனாகிறது. இதனால் பஞ்சாயத்தின் பணம் மிச்சமாவதோடு, இந்தப் பணம் வேறு வளர்ச்சிப்பணிகளுக்கு உதவிக்கரமாகவும் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன பஞ்சாயத்து, ஒன்றைச் செய்து காட்டவேண்டும் என்ற கருத்தாக்கத்தை நம் அனைவருக்கும் அளிக்கிறது என்று கூறினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி , காஞ்சிரங்கால் ஊராட்சியில் ரூ.66 லட்சம் திட்ட மதிப்பில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சிறு ஆலையை உருவாக்கினார். காய்கறி, கோழி, மீன் கழிவுகள் சேகரித்து அவற்றை அரைத்து, நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகிறார்கள். இது மக்கி மீத்தேன் வாயுவாக மாறும் போது, ஜெனரேட்டரை இயக்கி 220 கிலோ வாட் மின்சாரத்தைத் தயாரிக்கின்றனர். இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தெருவிளக்குகள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்துகின்றனர்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 29 ஆக 2021