மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

அடிஷனல் அட்வகேட் ஜெனரல்: உறுதியானது உத்தேசப் பட்டியல் - அடுத்து மாவட்ட அரசு வழக்கறிஞர்கள்!

அடிஷனல் அட்வகேட் ஜெனரல்: உறுதியானது உத்தேசப் பட்டியல் - அடுத்து மாவட்ட அரசு வழக்கறிஞர்கள்!

திமுக ஆட்சி அமைந்ததும் பல்வேறு அரசுத் துறை பணிகளில் திமுகவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு அக்கட்சிக்குள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில் அந்தச் செயல் திட்டங்கள் தள்ளிப்போய் கொண்டே இருந்தன. குறிப்பாக நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களுக்கான நியமனங்களும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தன.

இது தொடர்பாக அரசு வழக்கறிஞர்கள்: திமுகவுக்குள் உலவும் உத்தேச பட்டியல் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மின்னம்பலத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆகியவற்றில் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் அதாவது அடிஷனல் அட்வகேட் ஜெனரல் பதவிகளுக்காக நியமிக்கப்பட இருப்பவர்கள் குறித்த ஒரு உத்தேசப் பட்டியலை குறிப்பிட்டிருந்தோம்.

வழக்கறிஞர்கள் குமரேசன், வி.அருண், ஜெ.ரவீந்திரன், ராம்லால், நீலகண்டன், நசுருதீன், சிலம்பண்ணன், வீர.கதிரவன், பாஸ்கர் ஆகிய வழக்கறிஞர்கள் அடிஷனல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகப் பெயர்களையும் குறிப்பிட்டோம்.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 28) இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் மின்னம்பலம் செய்தியில் குறிப்பிட்ட பட்டியலில் இருப்பவர்களே அடிஷனல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்படி அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர்கள் ஹாஜா நசுருதீன், சிலம்பண்ணன், வீர.கதிரவன், ராம்லால் மற்றும் வழக்கறிஞர்கள் வி.அருண், ஆர்.பாஸ்கரன், குமரேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கான அடிஷனல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர்கள் நீலகண்டன், ரவீந்திரன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கான கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வழக்கறிஞர்களில் திமுகவின் கூட்டணி கட்சி சார்பில் யாரும் இடம்பெறவில்லை. அதனால், அடுத்ததாக நியமனம் செய்யப்பட இருக்கும் மாவட்ட ரீதியான அரசு வழக்கறிஞர்கள் பதவிகளுக்குத் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று திமுகவின் கூட்டணி கட்சிகள் காத்திருக்கிறார்கள்.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 29 ஆக 2021