மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

ரூ.50 கோடியில் வண்ணமீன் வர்த்தக மையம்!

ரூ.50 கோடியில்  வண்ணமீன் வர்த்தக மையம்!

சென்னை கொளத்தூரில் ரூ. 50 கோடி செலவில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும் என கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் சார்ந்த 28 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை கொளத்தூரில் முக்கிய தொழிலாக விளங்கி வரும் வண்ணமீன்கள் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், அந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலும் ரூ.50 கோடி செலவில், சர்வதேச தரத்தில், அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும்.

பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு, ரூ. 9 கோடியே 60 லட்சம் மானியத்தில், 2 ஆயிரம் வெளிப்பொருத்தும் உள்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்படும்.

விசைப்படகுகளுக்கு மின்னணு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் திட்டம், ரூ.30 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தி சீரமைக்கப்படும்.

உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கிடும் வகையில், 100 பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளர்ப்பதற்கு இடுபொருள் மானியமாக ரூ 30 லட்சம் வழங்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில், ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில், விலை மதிப்புமிக்க நாட்டு இன விரால் மீன் குஞ்சு உற்பத்தி பண்ணை அமைக்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் பாலமேடு, கடலூர் மாவட்டங்களில் பெரியகுப்பம், சின்ன குப்பம் ஆளிக்குப்பம் ஆகிய இடங்களில், ரூ. 39 கோடி செலவில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டம் இயக்கி ஆர் குப்பம் மீன்பிடி இறங்கு தளத்தின் மேம்பாட்டு பணிகள் மற்றும் அனுமந்தை கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர், ஜீவா நகர், ஆலந்தலை மீனவர் காலனி, குலசேகரப்பட்டணம் கடலோர கிராமங்களில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டம் பழைய குப்பம், புது நடுகுப்பம், அங்காளம்மன் குப்பம், செம்மஞ்சேரி குப்பம் மற்றும் கரிகட்டு குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் மொத்தமாக ரூ. 57 கோடி செலவில் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கடலோர கிராமங்களில், ரூ. 14 கோடி செலவில் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மீன் வளத்திற்கான மின்னணு விரிவாக்க மையம், ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் மீன் உற்பத்தியை அதிகரிக்க ஒருங்கிணைந்த மீன் நோய் கண்காணிப்பு மேற்பார்வை மற்றும் மீன் குஞ்சுகளின் தர மதிப்பீட்டினை மேற்கொள்ளும் அமைப்பு ரூ. 1 கோடியே 30 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

உள்நாட்டு மீன்வளர்ப்பு திறன் மேம்பாட்டிற்காக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த செயல் விளக்க மீன் பண்ணை வளாகம், ரூ. 3 கோடியே 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்திற்கு தூத்துக்குடியில் திட்ட அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் வானவெளியில் டீசல் விற்பனை நிலையம் ஆகிய வசதிகள் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம், மாநிலத்தில் 10 இடங்களில் மீனவ மகளிருக்கு முன்னுரிமை அளித்திடும் வகையில் மீன் விற்பனை அங்காடிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு பணிக்காக கூடுதல் நேர்கல் சுவர், ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் சிப்பிகுளம் மற்றும் கீழ் வைப்பார் கிராமங்களில் உள்ள மீன் இறங்கு தளங்கள் ரூ. 38 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட 28 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

-வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 29 ஆக 2021