மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஆக 2021

ஆவின் பால் விலை உயர்வு?

ஆவின் பால் விலை உயர்வு?

சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.

அப்போது பேசிய பால் வளத் துறை அமைச்சர் நாசர், “சென்னையில் நாளொன்றுக்குச் சராசரியாக 13.53 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதனை, 2021-22ம் ஆண்டில் 15 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

பால் உற்பத்தியாளர்களுக்கு மின்னணு வழியாகப் பணப்பட்டுவாடா செய்யப்படும்.

துபாய், அபுதாபி, கத்தார், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆவின் பால் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

2021க்குள் 200 புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்படும்.

பால் உற்பத்தியாளர்கள் இல்லங்களுக்குச் சென்று கால்நடைகளுக்கு மருத்துவ சேவை வழங்க 162 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் ரூ.6.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். கால்நடைகளின் நலன்களைப் பேணவும் தரமான சிகிச்சை வழங்கவும் ரூ.7.76 கோடி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.

விருதுநகரில் 50 மெட்ரிக் டன் திறன் கொண்ட புதிய கால்நடை தீவன ஆலை நிறுவப்படும்.

தீவிர சந்தைப்படுத்துதல் முயற்சிகளின் விளைவாக ஐஸ்கிரீம் விற்பனை நாள் ஒன்றுக்கு 6,000 லிட்டரிலிருந்து 10 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கை அடைந்துள்ளது.

தஞ்சாவூரில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

அம்பத்தூரில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் பிரிவு, சேலம், அம்மாபாளையத்தில் பால்பவுடர் தயாரிக்கும் பிரிவு ரூ.51.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சேலம் கூட்டுறவு பால் பண்ணையில் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் அலகு ரூ.8 கோடியில் அமைக்கப்படும்.

ஆவின் நிறுவனத்தில் மேலாளர் வரையிலான பணியிடங்களை அரசு ஆணை பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, ஆதரவற்ற பெண்களுக்குத் தலா 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும். 38,800 பெண்களுக்கு ரூ. 75.63 கோடியில் செம்மறி / வெள்ளாடுகள் 100% மானியத்தில் தரப்படும்.

ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்து நீண்ட காலமானதாலும், உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளதாலும் பால் பொருட்களின் விலையை மாற்றி அமைப்பது அவசியம்.

செல்லப்பிராணிகளுக்கான பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்னை நந்தனத்தில் ரூ.7.99 கோடியில் நிறுவப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 29 ஆக 2021