மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்: அவசர கதியில் தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியல்: அவசர கதியில் தேர்தல் ஆணையம்!

செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

அதன் அடுத்த கட்டமாக வரும் 31 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று (ஆகஸ்டு 27) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை , திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேற்படி மாவட்டங்களிலுள்ள சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு வாக்காளரின் பெயரும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்க்கப்பட்டு, அவர்களை தொடர்புடைய உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வைத்து ஜனநாயக கடமையாற்ற வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது.

மேற்படி 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் தனியாக தயாரிக்கப்படுவது அல்ல. இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து 19- 3- 2021 அன்று வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலிலுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே கிராம ஊராட்சி வார்டு வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றது. அதன் பிறகு கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலரால் 31- 8 -2021 அன்று வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம் பெறச் செய்ய நினைத்தால், உடனே அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலகம் சென்று தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும்.

புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னரே... உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் உரியவாறு சேர்க்கப்படும்.

எனவே தொடர்புடைய சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலக தொடர்பு கொண்டு பெரிய சேர்க்கை முகவரி மாற்றம் போன்ற தேவையான திருத்தங்களை செய்து கொள்ளுமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் ஆகஸ்டு 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் பெயர் சேர்க்க முகவரி மாற்றம் செய்ய கொடுக்கப்பட்டிருக்கும் அவகாசம் ஆகஸ்டு, 28,29,30 ஆகிய தேதிகள். அதிலும் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை. ஆக மீதம் இருக்கும் இரண்டு நாட்களில் விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்க வேண்டுமாம்.

அவசர கதியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 28 ஆக 2021