மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஆக 2021

‘எனது நிலைமை’ : சிவாஜி பாடலை மேற்கோள் காட்டிய ஓபிஎஸ்

‘எனது நிலைமை’ : சிவாஜி பாடலை மேற்கோள் காட்டிய ஓபிஎஸ்

தமிழக சட்டப்பேரவையில் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் காரசார விவாதத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலில் இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது விவசாயிகளின் வாழ்வு செழிக்க மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்ய வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

உடனடியாக இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசுகையில், அவசரமாகத் தனித் தீர்மானம் கொண்டுவராமல் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தலாம். அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கலாம் என்று கூறினார்.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், "மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள பாதகங்களை ஒன்றிய அரசிடம் எடுத்துச் சொல்லி உண்மைத் தன்மையை விளக்கிக் கூறி நமக்குச் சாதகமான பதில் கிடைக்குமானால் திருத்தத்தைக் கொண்டு வரலாம். விவசாயிகள் நலன் கருதி எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால் பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தைக் கொண்டு வரலாம்” என்று கூறினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “குழந்தைகளுக்குக் கூட இந்த சட்டத்தில் உள்ள பாதகங்கள் பற்றித் தெரியும். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இருப்பதால் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கலாம். சாதக பாதகங்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகக் கிடைக்கவில்லை” என்றார்.

இதையடுத்து, விவசாயிகளுக்காக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறோம், அதனை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்று மீண்டும் துரைமுருகன் கேள்வி எழுப்பிய நிலையில், “எங்களை வழியனுப்பும் நோக்கிலேயே அவை முன்னவர் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார் ஓபிஎஸ்.

மேலும் தான் பேசும்போது, “நதியில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு என்ற சிவாஜி கணேசன் நடித்த தேனும் பாலும் என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். அதோடு 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எனது நிலை என்ன என்பது அவை முன்னவருக்குத் தெரியும்” என்று ஓபிஎஸ் கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தொடர்ந்து இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

-பிரியா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

சனி 28 ஆக 2021