மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஆக 2021

உச்ச நீதிமன்றத்துக்கு 9 புதிய நீதிபதிகள் நியமனம்!

உச்ச நீதிமன்றத்துக்கு 9 புதிய நீதிபதிகள் நியமனம்!

உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (ஆகஸ்ட் 26) உத்தரவு பிறப்பித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பதவிகள் உள்ளன. தற்போது 24 நீதிபதிகளே பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் கொலிஜியம் நடவடிக்கை எடுத்தது. தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான கொலிஜியம், குடியரசுத் தலைவருக்கு 9 நீதிபதிகள் கொண்ட பட்டியலை அனுப்பிப் பரிந்துரைத்தது.

அதன்படி புதிதாக 9 நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பெங்களூர் வெங்கடராமைய்யா நாகரத்னா, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சுடலையில் தேவன் ரவிகுமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பேலா மதூர்யா திரிவேதி மற்றும் வழக்கறிஞர் பமிடிகாந்தம் ஸ்ரீ நரசிம்மா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 27 ஆக 2021