மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 ஆக 2021

வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த ஒப்புதல்!

வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த ஒப்புதல்!

பொதுத் துறை வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வங்கி ஊழியர்கள் அதிகாரிகளின் குடும்ப ஓய்வூதியம் மிக மிகக் குறைவாக உள்ளது எனவும் ஒன்றிய அரசு ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்துக்கு இணையாக உயர்த்த வேண்டும் என்றும் நீண்ட காலமாக வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 25) ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் 'வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடும்ப ஓய்வூதியத்தை, கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 30 சதவிகிதமாக அதிகரிக்க இந்திய வங்கிகளின் சங்கங்கள் தெரிவித்த திட்டத்துக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், வங்கி ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை அதிகரிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், 'தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஊழியர்களின் பங்களிப்பை தற்போதுள்ள 10 சதவிகிதத்திலிருந்து, 14 சதவிகிதமாக உயர்த்தவும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டதன் மூலம், ஆயிரக்கணக்கான பொதுத் துறை வங்கி ஊழியர்களின் குடும்பங்கள் பயனடையும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 26 ஆக 2021